மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் கணித கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வர் முனைவர் கே. தியாகேசன் தலைமை
வகித்தார். கல்லூரி கணிதவியல் துறை தலைவர் பேராசிரியர் எஸ். சிவராமன்
முன்னிலை வகித்தார்.
குடந்தை அரசினர் கல்லூரி கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் எஸ்.
கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் ஜமால் முகம்மது, கணிதவியல் இணைப்
பேராசிரியர் ஆர். ஜாஹீர்உசைன், அண்ணாமலை பல்கலைக்கழக கணிதவியல் துறை
தலைவர் எம். தில்லைகோவிந்தன் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் கருத்தரங்கில்
பேசினர்.
நிறைவு விழாவில் கல்லூரி செயலர் சி. செந்தில்வேல் பங்கேற்றார். கருத்தரங்கில் ஏவிசி கல்லூரி, பூம்புகார் கல்லூரி, பொறையாறு டிபிஎம்எல்
கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள்
பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணிதவியல் பேராசிரியர்கள் யமுனா, கே.ஆறுமுகம், எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment